FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் 'சிம் கார்டு' பெறலாம்


ஆதார் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே, இனி, 'சிம் கார்டு' வழங்க வேண்டும்' என, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.மத்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இனிமேல், 'சிம் கார்டு' கேட்டு, வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் ஆதார் அடையாள அட்டை நகலை கேட்டு வாங்க வேண்டும். விண்ணப்பத்தில், கட்டாயமாக ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும்.தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், தங்கள் தகவல் தொகுப்புகளில் (டேடா பேஸ்) வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும். இந்த மாற்றத்தை, இரண்டு மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment