FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தொலைநோக்கி மூலம் படம்பிடிக்கப்பட்ட சூப்பர்நோவா

 


    
altமுந்தைய காலத்தில் ஏற்பட்ட சூப்பர்நோவாவை சீன விஞ்ஞானிகள் 185எடி யில் பார்த்துள்ளனர், ஆனால் தற்போது நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறுவதை (சூப்பர்நோவா) ஒரு தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. எரிக் கோல்ஸ் என்ற ஒரு மனிதரின் வீட்டுத் தோட்டத்தில் வைத்துள்ள தொலைநோக்கியில் இந்த வியக்கத்தக்க சூப்பர்நோவா புகைப்படங்கள் பதிவாகியுள்ளது. 70 வயதுடைய வேதியியல் ஆய்வாளரான எரிக் கோல்ஸ், ஜந்து தொலைநோக்கியில் வெவ்வேறு ஃபில்டர்களை உபயோகித்ததன் மூலம் அருகிலுள்ள நட்சத்திரங்களிலிருந்து ஆற்றலை உறிஞ்சும் வெவ்வேறு வாயுக்களின் வடிவங்கள் மற்றும் படிமங்களை கண்டறிந்துள்ளார்.

சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரம் அதன் ஆயுட்காலத்தின் இறுதியில், கண்ணைக் கவரும் வகையில் பிரகாசமாக வெடித்துச் சிதறும். மிகப்பெரிய நட்சத்திரங்கள் பிரகாசமாக இருப்பதால் அவைகளை கண்டுபிடிப்பது மிகவும் சுலபம். நம் பால்வெளியில் (miky way galaxy) இது போல பல நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மிக அதிகமான தூரத்தில் இருப்பதால் நமக்கு அவைகளால் ஆபத்து இல்லை.

நட்சத்திரத்தின் தன்மை மாறுபடும்போது இரண்டு வகைகளில் சூப்பர்நோவா உருவாகும். அவைகளில் ஒன்று, சாகும் தருவாயில் இருக்கும் நட்சத்திரம் வெடிக்கும் பொழுது சூப்பர்நோவா உருவாகின்றது. மற்றொன்று, இன்னும் சில பில்லியன் வருடங்களில் சூரியன் சாகும் பொழுது அது தனது வெளிப்புறத்தை உதிர்த்துவிடுவதால் மிகுந்த வெப்பமான அதன் உட்பகுதி (core) மட்டுமே இருக்கும். முன்பிருந்த சூரியனை விட இப்பொழுது உட்பகுதி மட்டும் கொண்ட சூரியனின் எடை பாதி இருக்கும். ஆனால் அது பூமியைப் போன்று அளவில் சிறியதாக இருக்கும்.

இயற்கையில் சூரியன் பூமியை விட பல மடங்கு பெரியது. சூரியனை நிறப்ப ஒரு மில்லியன் பூமி வேண்டும். இதைத் தான் white dwarf என்று சொல்லுவார்கள். dwarf என்றால் அளவில் சிறியது என்று அர்த்தம். இது மாதிரியான white dwarf நட்சத்திரங்கள் சூரியனைப் போன்ற சாதாரண நட்சத்திரங்களைச் சுற்றும் பொழுது அவை அந்த நட்சத்திரங்களிலிருந்து மூலப்பொருட்களை இழுக்கும். இவ்வாறு white dwarfக்கு வந்து சேரும் பொருட்கள் (mass) அதன் மேல் படியத்துடங்கும் நாளடைவில் white dwarf ஒரு thermonuclear பாம் போல வெடித்துசிதறும். இந்த வகைக்குப் பெயர் தான் சூப்பர்நோவா.

No comments:

Post a Comment