FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.கடலுர் மாவட்டத்திலிருந்து 44 பேர் தேர்வு.

DEE - SGT - DISTRICT WISE 1675 CANDIDATE SELECTION LIST CLICK HERE..

அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிஉயர்த்தப்பட உள்ளதுஇதன்படிதற்போதுள்ள 100 சதவீதஅகவிலைப்படி,
107 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இந்த உத்தரவு ஜூலை1ம் தேதி முதல் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.

* 01.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும்

* 02.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்.


ஆசிரியர்களுக்கு மேற்படி கலந்தாய்வு தேதியன்று பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

* 04.09.2014 முதல் 06.09.2014 வரை - சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான  பணி நியமன ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

* 08.09.2014 - புதிய இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும்.

ஆசிரியர் பணி-அதிர்ச்சியில். ஆசிரியர்கள்

வயது ஒரு தடையில்லை ஆசிரியருக்கு படித்துவிட்டால் 58 வயதிலும் வேலை உண்டு என்ற நிலைதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் தற்போது கட்டாய கல்வி சட்டத்தின் படி ஆசிரியர்கள் தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் .  இதை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒவ்வொரு முறையும் பல வழக்குகளை சந்தித்து தடுமாறி வருகிறது.இதுவரை 30000 இடைநிலை ஆசிரியர்கள் தகுதி. பெற்று காத்திருக்கும் நிலையில் வெறும் 1667 பேருக்கு மட்டுமே வேலை என்கிறது டி.ஆர்.பி அப்படியானால் மற்றவர்கள்களின் நிலை என்ன கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் 5% பாதிக்கப்ப்ட்வர்கள் வேறு போராட்டத்தில் உள்ளனர் . வெயிட்டேஜினால் பாதிக்கப்பட்டபட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது . இப்போதே ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது . இதனால்அரசுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பில்லை  .  ஆனால்பாதிப்பு என்னவோ வரக்கூடிய புதிய ஆசிரியர் சமுதாயத்திற்கே என்பதில் துளியும் ஐயமில்லை.

ஆசிரியர் தினம் - பெயர் மாற்றம்

ஆசிரியர் தினத்தின். பெயரை. குரு உத்சவ். என. பெயர். மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு. அறிவித்துள்ளது 

பலவகை கலவை சாத திட்டம் விரைவில் துவக்க நடவடிக்கை

தமிழகத்தில் உள்ள, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்களில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் திட்டம், விரைவில் துவக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு ஒன்றியத்தில் உள்ள, அங்கன்வாடி மையங்கள் மற்றும் மூன்று பள்ளி களில் உள்ள சத்துணவு மையங்களில், சோதனை அடிப்படையில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா சேர்த்த முட்டை வழங்கும் முன்னோடி திட்டம், கடந்த ஆண்டு, மார்ச், 20ம் தேதி துவக்கப்பட்டது இத்திட்டத்திற்கு, மாணவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், தமிழகத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, திட்டம் நீட்டிக்கப்படும். இதற்காக ஆண்டுக்கு, 103.28 கோடி ரூபாய், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என, முதல்வர் ஜெயலலிதா, சுதந்திர தின விழா அன்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, திட்டத்தை அனைத்து மையங்களுக்கும் விரிவுப்படுத்தும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில், அமைச்சர் வளர்மதி தலைமையில், சமூக நலத்துறை அலுவலர்கள், அனைத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கள் (சத்துணவு), ஆகியோர் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பலவகை கலவை சாதத்துடன், மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்ட விரிவாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, அமைச்சர் வளர்மதி கூறியதாவது: முதல்வர் உத்தரவின்படி, விரைவில் அனைத்து மையங்களிலும், பலவகை கலவை சாதத்துடன், மசாலா கலந்த முட்டை வழங்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சமையலர்களுக்கு, பலவகை கலவை சாதம் மற்றும் மசாலா கலந்த முட்டை தயாரிக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடிந்ததும், அடுத்த மாதம், திட்டம் விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு, வளர்மதி தெரிவித்தார்.

செப்டம்பர் 18ஆம் தேதி உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல்: மாநில தேர்தல்ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

14700 ஆசிரியர்கள் நியமனம்

14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்புமிகு முதல்வர் இன்று 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்

20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது: அதிர்ச்சி தகவல்

விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில், 20 சதவீதம் மாணவர்களுக்கு அடிப்படை கணிதமே தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் வெளியாகி உள்ளது.
இதனிடையே 1 முதல் 5ம்வகுப்புவரை துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதத்தில் அடிப்படை சரியாக இல்லாததே, பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பில் தேர்ச்சி சதவீதம் குறைய காரணம் என கண்டறியப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் எழுதும் மற்றும் வாசிக்கும் திறன், கணித அடிப்படை திறன் குறித்து ஆசிரிய பயிற்றுனர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழ் வாசிப்பு, எழுதுதல் திறன்: 2013ல் 641 பள்ளிகளில் 404 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 61,878 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 60 சதவீத பேருக்கு மட்டுமே தமிழ் வாசிக்கும் திறன் இருந்தது கண்டறியப்பட்டது. 2014ல், 488 பள்ளிகளில் 50,492 மாணவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 73 சதவீதம் பேருக்கு மட்டுமே தமிழ் வாசிக்கும் திறன் இருந்தது தெரியவந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர்  சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000 பேர் தாற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

அடுத்த கட்டமாக, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை கவன ஈர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பேரணியின் முடிவில் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கவுள்ளோம் .

PGTRB - PROVISIONAL SELECTION LIST

PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)

சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லையா?

சிறுபான்மை நடத்தும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை???
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் & 2009 பொருந்தாது என கடந்த 6.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் தீர்ப்பு வழங்கி உள்ளது. எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தகுதி தேர்வில் தேர்ச்சியின்றி பணியமர்த்தப்பட்ட எங்களை, பணியில் இருந்து நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். பின் அவர் பிறப்பித்த உத்தரவில் 4 ஆசிரியர்களையும் பணியில் இருந்து நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்தார். இதுதொடர்பாக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பிரபல பாடகி ஜானகி சாமி தரிசனம்


ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான பொதுமாறுதல் (கலந்தாய்வு) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஆன்-லைனில் நாளை (புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் நடைபெறும்.

 இந்த பதவிகளுக்கு ஆன்-லைனில் மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் ஆன்-லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர்( இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல்) பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்றிரவு வெளியிட்டது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை


ஓட்டுனர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை இயக்க தடை- கல்வித்துறை செயலர்

CRC TENTATIVE TRAINING CALENDER-2014/15


எட்டாம் வகுப்புக்கான (இ.எஸ்.எல்.சி) செப்., 25 ல், துவங்கும்

ராமநாதபுரம்: எட்டாம் வகுப்புக்கான (இ.எஸ்.எல்.சி) செப்., 25 ல், துவங்கும் தனித்தேர்வு கால அட்டணை வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்கக கூடுதல் செயலாளர் ரேவதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:

தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்கள் 2,582 பேர் நியமனம்

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் 2,582 இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
மத்திய அரசு அறிமுகப்படுத்திய கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 23.08.2010க்கு பிறகு இடைந¤லை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12 மற்றும் அக்.14ம் தேதியில் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதனால் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஆக.17ம் தேதி அந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி முடிந்துள் ளது. எனினும் கோர்ட்டில் வழக்குகள், வெயிட்டேஜ் ஆகியவை காரணமாக ஆசிரியர் நியமனம் தாமதமாகி வருகிறது. இதனிடையில், தொடக்க கல்வித் துறையில் 2,584 இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி உத்தரவு

பள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் 100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு

தொடக்கக் கல்வி - வழக்கு

தொடக்கக் கல்வி - வழக்கு - அரசாணை எண்.210, 146 ஆகியவற்றின் பலனை நீட்டித்து வழங்க கோரியும், அரசாணை எண்.216ன் படி ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரி தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாணைகள் மீது சீராய்வு மனு தாக்கல் செய்து தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரி இயக்குனர் உத்தரவு

ஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்லை: யு.பி.எஸ்.சி.


ஆகஸ்ட் 24ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்லை என மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவுறுத்தி உள்ளது.


இதுதொடர்பாக யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாளை நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு தொடர்பாக சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளில் சில சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி தேர்வர்களுக்கு அறிவிக்கப்படும் புதிய அறிவிப்பு வருமாறு: 24.8.14ல் முதல் மற்றும் இரண்டாம் தாள் என சிவில் தேர்வு முதல்நிலை தேர்வு நடக்கும்.

இரண்டாம் தாள் தேர்வு கேள்வித்தாளில் 10ம் வகுப்பு தரத்தில் இடம் பெற்றுள்ள ஆங்கில திறனறிதல் கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க வேண்டாம். இந்த கேள்விகள் கிரேடு மற்றும் மெரிட் பட்டியலுக்காக மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.

எனவே தேர்வர்கள், ஆங்கில கேள்விகளை தொட தேவையில்லை. மேலும் ஆங்கில கேள்விகளை, இந்தி வழி கேள்வித்தாளில் அச்சடிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மொத்த மதிப்பெண்ணில் ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண் கழிக்கப்படும்.

எனவே பிரதான தேர்வுக்கு (மெயின்) தகுதியான தேர்வர்களை தேர்வு செய்யும்போது, முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண் போக, மீதியுள்ள மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.