வயது ஒரு தடையில்லை ஆசிரியருக்கு படித்துவிட்டால் 58 வயதிலும் வேலை உண்டு என்ற நிலைதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் தற்போது கட்டாய கல்வி சட்டத்தின் படி ஆசிரியர்கள் தேர்வின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் . இதை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒவ்வொரு முறையும் பல வழக்குகளை சந்தித்து தடுமாறி வருகிறது.இதுவரை 30000 இடைநிலை ஆசிரியர்கள் தகுதி. பெற்று காத்திருக்கும் நிலையில் வெறும் 1667 பேருக்கு மட்டுமே வேலை என்கிறது டி.ஆர்.பி அப்படியானால் மற்றவர்கள்களின் நிலை என்ன கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் 5% பாதிக்கப்ப்ட்வர்கள் வேறு போராட்டத்தில் உள்ளனர் . வெயிட்டேஜினால் பாதிக்கப்பட்டபட்டதாரி ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது . இப்போதே ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளது . இதனால்அரசுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பில்லை . ஆனால்பாதிப்பு என்னவோ வரக்கூடிய புதிய ஆசிரியர் சமுதாயத்திற்கே என்பதில் துளியும் ஐயமில்லை.
No comments:
Post a Comment