தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் 2,582
இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய
கட்டாய கல்வி சட்டம் 2009ன்படி 23.08.2010க்கு பிறகு இடைந¤லை ஆசிரியர்,
பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12 மற்றும் அக்.14ம் தேதியில் தகுதி
தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே
தேர்ச்சி பெற்றனர்.
இதனால் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை
பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ஆக.17ம் தேதி
அந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில்
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு பணி முடிந்துள் ளது.
எனினும் கோர்ட்டில் வழக்குகள், வெயிட்டேஜ் ஆகியவை காரணமாக ஆசிரியர் நியமனம்
தாமதமாகி வருகிறது. இதனிடையில், தொடக்க கல்வித் துறையில் 2,584 இடைநிலை
ஆசிரியர்கள் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு நியமிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment