FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி - தினமணி

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர்  சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000 பேர் தாற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

அடுத்த கட்டமாக, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை கவன ஈர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பேரணியின் முடிவில் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கவுள்ளோம் .

No comments:

Post a Comment