அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நடத்திக் கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது. ஆனால், தேர்வை இறுதி செய்யக் கூடாது எனவும் உத்தரவிட்டு உள்ளது.
வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்த, கோபி என்பவர், தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தற்போது, நேரடி தேர்வு மூலம் 4,393 காலியிடங்களை நிரப்புவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 3ம் தேதி அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை