பொதுவாக பப்பாளி என்றாலே அது கர்ப்பத்தை கலைக்கும், பெண்கள் உண்பது நல்லது அல்ல என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்ஆனால் பப்பாளி சாப்பிடுவதால் நேரும் நன்மைகள் ஏராளம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
மேலும் எந்த ஒரு காலத்திலும் விலைக்குறைவாக கிடைக்ககூடிய ஒரே பழம் பப்பாளி மட்டுமே.
பப்பாளியின் நன்மைகள்
புற்றுநோய் வராமல் இருக்க நமது உணவை கட்டுபடுத்துகிறேம். ஆனால் தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள லைகோபைன் புற்றுநோய் செல்களை அழிக்கும். இதனால் கல்லீரர், மார்பகம் மற்றும் கணையம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோயைத் தடுக்கலாம்.
பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோ பாப்பைன் இருப்பதால், இவை உடலில் உள்ள உட்காயங்களை குறைக்கும். இதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருப்பதால் அவ்வப்போது உட்கொள்வதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
தினமும் பப்பாளியை உட்கொண்டு வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம். |
No comments:
Post a Comment