FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பிளஸ்-2 துணை தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செப்டம்பர் 29-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் (தட்கல் 

தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகிறது. மதிப்பெண் சான்றிதழ்களை நாளை பிற்பகல்2 மணி முதல் அவர்கள் தேர்வு எழுதிய, தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது.விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையத்தில் அக்டோபர் 29-ந் தேதிமுதல் 31-ந் தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்துடன் ஆன்-லைன் பதிவு கட்டணமாக 50 ரூபாயை பணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வு துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள் நகல் களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுக் கூட்டல் முடிவுகள் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும் என்பதால், ஒப்புகை சீட்டை பாதுகாப்புடன் வைத்திருத்தல் வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment