FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழக மீனவர் 5 பேருக்கு இலங்கையில் மரண தண்டனை தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்


தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை அளித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு. மீனவர்கள் மதுரை இரமேஸ்வரம் ரோட்டில் மறியல் செய்கின்றனர். தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதி இந்திய அரசு உதவி செய்வதாக அறிவிப்பு இரயில்கள் சென்னையில் மறிப்பு தங்கச்சி மடத்தில் தண்டவாளம் தகர்ப்பு  இலங்கை அதிபர் உருவபொம்மை எரிப்பு

கொழும்பு : போதை பொருள் கடத்திய வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5
மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்த தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கப் போவதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன. அ.தி.முக., , தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு கடும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மீனவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. 2011 ல் இந்தியாவில் இருந்து கொழும்புவுக்கு போதை பொருள் கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேர் மீதும், இலங்கையை சேர்ந்த 3 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. 8 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கில் மீனவர்கள் 8 பேருக்கும் கொழும்பு கோர்ட் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு இலங்கை மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய நவ. 14ம் வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு தூக்கு ? ; ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த எமர்சன், பிரசாத், வில்சன், லாங்லெட், அகஸ்டஸ் ஆகிய 5 பேர் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளாக சிறையில்.,: கடந்த 2011 நவம்பர் 28ம் தேதி கைது செய்யப்பட்டனர். அன்று முதல் இவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் வழக்கை நடத்த தமிழக அரசு ரூ, 2 லட்சம் மீனவ பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.

பிரதமருக்கு மீனவர்கள் கோரிக்கை: இன்றைய தீர்ப்பு குறித்து தகவல் தெரிய வந்ததும், ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சியுற்றனர். பிரதமர் மோடி தலையிட்டு தூக்கு தண்டனையை ரத்து செய்யவும், மேல் முறையீட்டு வழக்கிற்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்பருதீன் உறுதி : மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் குற்றமற்றவர்கள் என நாங்கள் கருதுகிறோம். தீர்ப்பின் நகல் கிடைத்த பின், அதை ஆராய்ந்து அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என நிரூபிப்பதற்கு தேவையான அனைத்து சட்டரீதியான உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அக்பருதீன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment