நிலவைப்பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்
1/ சந்திரனில் ஒரு முழு நாள் என்பது அதாவது ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரைக்கும் நம் பூமியின் நாட்கள் கண்க்குப்படி 29.5 நாட்கள் ஆகும். சுருக்கமாக சந்திரனில் ஒரு நாள் என்பது நமது பூமியின் நாட்கள் கணக்குப்படி 29.5 நாட்கள் ஆகும்.2/ கடந்த 41 வருடங்களாக சந்திரனுக்கு எந்த மனிதனும் செல்லவில்லை ( அதற்கு முன் மனிதன் கால் தடம் பதித்தது உண்மை என்றால் ?!)
3/ சந்திரன் நம்மைவிட்டு அதாவது பூமியை விட்டு வருடத்திற்கு 3.78 செண்டி மீட்டர் (1.48 இஞ்ச்) தூரம் விலகிச்செல்கிறது.
4/அப்போலோ 11 சந்திரனில் இறங்கியபோது பிடிக்கப்பட்ட ஒரிஜினல் வீடியோ படம் கவனக்குறைவாக அழிக்கப்பட்டு அதில் வேறு வீடியோ படம் பதிவு செய்யப்பட்டுவிட்டதாம் !
5/ சந்திரனில் இறங்கிய அப்போலோ 11 -ல் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டரின் சக்தியை விட தற்போது உங்கள் கைகளில் தவழும் செல்ஃபோன்கள் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டர்கள் சக்தி அதிகம் ?!
6/காரை மேல்நோக்கி மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச்சென்றால் நீங்கள் நிலவை அடைய ஆறு மாதங்களாகும்!
7/ முழு சந்திரகிரகணம் ஏற்படும்போது தெரியும் அந்த அற்புதமான காட்சிக்கு காரணம் என்ன தெரியுமா ? சூரியன் நிலவை விட 400 மடங்கு பெரியதாகும் அதே வேளையில் சூரியன் பூமியில் இருந்து 400 மடங்கு தூரத்தில் இருப்பதால் இரண்டும் ஒரே அளவில் தோன்றி நம் கண்களுக்கு அந்த அற்புதமான காட்சியை தருகின்றன.
8/ நிலா நாம் பார்ப்பது போல் அல்லது நினைப்பது போல் வட்டமாக இல்லையாம் ! சிறிதளவு கோணலாக அதாவது முட்டை வடிவமாகத்தான் இருக்கிறதாம் !
9/ நமது நிலவின் அளவு பூமியில் கால்பங்காகும் இது ப்ளூட்டோ வை விட அளவில் பெரியதாகும்.
10/ சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி பவுர்ணமி இரவில் அதிகமானோரின் தூக்கம் இழந்து தவிப்பதாகவும் அதற்கு மாறாக அமாவசை இரவுகளில் நன்றாக தூங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
No comments:
Post a Comment