FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மாணவியரின் உயர்கல்விக்கு 'உதான்' புதிய திட்டம் : மத்திய அரசு பள்ளிகளில் பயிற்சி

மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ..டி., மற்றும் என்..டி., க்களில் சேருவதற்கு புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு, ஜெ...., என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்காக, மத்திய அரசின் பாடத்திட்டம் செயல்படுத்தும் கேந்திரிய பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு 'உதான்' என்ற அமைப்பின் திட்டம் இதற்காக செயல்படுத்தப்பட உள்ளது. இதில் மேல்நிலையில் படிக்கும் சிறந்த மாணவிகள் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அவர்களுக்கு ஆன்-லைன் அல்லது நேரடியாக சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும். பயிற்சி புத்தகம், டேப்லெட் இலவசமாக வழங்கப்படும். சந்தேகங்களை தெளிவுபடுத்த 'ஹெல்ப் லைன்' வசதியும் ஏற்படுத்தப்படும்.
 
ஜெ...., தேர்வுக்கு விண்ணப்பிப்பது முதல் தேர்வு எழுதுவது வரை வழிகாட்டுதல் தொடரும். பயிற்சிக்கு 50 சதவீதம் பேர் எஸ்.சி.எஸ்.டி., பிரிவில் இருந்து தேர்வு செய்யப்படுவர். மேல்நிலையில் கணிதம், அறிவியல் பிரிவு மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.
 
பிளஸ் 1ல் படிக்கும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்ணுடன், கணிதம், அறிவியலில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 மாணவர்களை பொறுத்தவரை, மேற்கண்ட தகுதியுடன், பிளஸ் 1ல் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஏழை மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மாநில பாடத்திட்ட மாணவிகளும் பங்கேற்கலாம். தகுதியுள்ளவர்கள் அக்.,27 க்குள் விண்ணப்பிக்கலாம்.
 
நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா கூறுகையில், ''உதான் திட்டம் குறித்த சுற்றறிக்கை சமீபத்தில் வந்துள்ளது. மாணவர்களுக்கு தெரிவித்துள்ளோம். பெற்றோர் இதுகுறித்து அறிந்து விண்ணப்பிக்கலாம்,'' என்றார்.

No comments:

Post a Comment