FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதிதாக பொறுப்பேற்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுரை

மாறி வரும் சமுதாய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி கற்பிக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சமீபத்தில் முதுகலை
பட்டதாரி ஆசிரியர்கள் ஏராளமானோர் ஆசிரியர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள்செயல்பாடுகள்குறித்த முகாம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.இதன் அடிப்படையில்திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி வித்யாபார்த்திமேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் முதுகலை பட்டதாரிஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.இதில் தமிழகம்முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 225 இயற்பியல் முதுகலை பட்டதாரிஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்துத்துவக்கி வைத்தார்முதன்மை கருத்தாளர்களாக ஈரோடுமாவட்டத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பால்துரை,ராமானுஜம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 10கருத்தாளர்களும் இதில் கலந்து கொண்டனர்இதில்,பள்ளி மற்றும்பாடத்திட்டத்தின் நிலையை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ற வகையில்பாடங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.மாறி வரும் சமுதாயசூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்திகற்பிக்க வேண்டும்.

உளவியல் முறையில் மாணவர்களை அணுகி அவர்களின்சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவேண்டும்.புதிய கல்வியியல்கருத்துக்களின் மூலம் எளிமையான முறையில் கற்பிக்கவேண்டும்.கற்றல் திறன் குறைந்த மாணவர்களை தேர்ச்சி பெறும்அளவிற்கு உயர்த்தவும்சிறந்தமாணவர்களை முழு மதிப்பெண்பெறவும் ஆசிரியர்கள் போதிக்க வேண்டும்.மேலும் பிளஸ் 2 தேர்வில்மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில்புதியஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்றுதெரிவிக்கப்பட்டது.புதியதாக பொறுப்பேற்கக் கூடிய ஆசிரியர்களுக்குமனதை ஒருமுகப்படுத்த யோகா பயிற்சியும்பிரபல மனோதத்துவநிபுணர் மூலம் உளவியல் பயிற்சியும் அளிக்கப்படும் என்று முகாமில்தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment