FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெயிட்டேஜ் முறை விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி போலீசார் அதிர்ச்சி - தினகரன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இவர்கள் பேரணிநடத்தினர். பேரணி, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது.அப்போது, பேரணியில் கலந்துகொண்ட, நாகை மாவட்டம் சீர்காழி ராதாநல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (29), சென்னை குரோம்பேட்டை சரஸ்வதிபுரம் விரிவாக்கம் கபிலன் (29), சேலம் வீரகநல்லூர் செல்லத்துரை (31), திருவிடை மருதூர் கார்த்திக் (29) ஆகிய 4 பேரும் குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்து மயங்கினர்.

No comments:

Post a Comment