FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' பிரதமர், நரேந்திர மோடி

முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாகவும், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுக்காக, நாடு முழுவதும், 350 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
டில்லியில் இன்று நடைபெறும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 350 ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார்.இதன் ஒரு பகுதியாக, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, மோடி பேசியதாவது :

மாறி வரும் சூழ்நிலையில், மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்க்கும் வகையில், ஆசிரியர்கள் தங்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும். உலகளாவிய மாற்றங்களை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.ஆசிரியர், எத்தனை வயதானாலும் தன் அறிவாற்றலையும், தன் அனுபவத்தையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு சமர்ப்பிக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment