கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரடி மேற்பார்வையில் கலந்தாய்வு நடத்த
வேண்டும். கலந்தாய்வு முடியும் வரை, மாவட்ட தலைமையை விட்டு அவர்கள்
வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. கலந்தாய்வுக்கு வருபவர்களிடம், கனிவான
அணுகு முறையை கையாள வேண்டும். ஆசிரியர்கள், கலந்தாய்வில் தங்களுக்கு
விருப்பமான இடத்தை தேர்வு செய்தவுடன், ஒதுக்கீட்டு ஆணையை உடனே பிரின்ட்
எடுத்து கொடுக்க வேண்டும்.
கலந்தாய்வு நடக்கும்போது, மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இல்லாத
பட்சத்தில், அதை காத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த
வேண்டும். பணியிட ஒதுக்கீடு பெற்றவர்கள், ஒதுக்கீட்டு ஆணையில்
குறிப்பிட்டுள்ள, ஆவணங்களுடன் செப்.,4 முதல் 6 ம் தேதிக்குள் மாவட்ட தொடக்க
கல்வி அலுவலரிடம் பணி நியமன ஆணை பெற்று, செப்.,8 ல் பணியில் சேர்ந்திட
தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment